கிழக்கு மாகாண தேர்தல் - ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண தேர்தலில் மொத்தமாக 308886 வாக்குகளை பெற்று 20 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் 105341 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 59298 பெற்று 4 ஆசனங்களையும், அம்பாறை மாவட்டத்தில் 144,247 வக்குகளை பெற்று 8 ஆசனங்களையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்டத்தில் 70,858 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 58602 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் , அம்பாறை மாவட்டத்தில் 121,272 பெRறு 6 ஆசனங்களையும், மொத்தமாக 250732 வாக்குகளை பெற்று 15 ஆசனக்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பறியுள்ளது . மக்கள் விடுதலை முன்னனி மொத்தமாக 9390 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளதுடன், மக்கள் ஜனநாயக முன்னனி மொத்தமாக 7714 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.