தமிழச்சி ! உங்கள் ஆட்டத்தைக்கொஞ்சம் நிறுத்துகிறீர்களா

இப்ப தோழர் தமிழச்சியின் போக்கே சரியாயில்லை உண்மையைச்சொன்னப்போனால் அவர்தான் இப்படி எழுதிறாரோ என்டு தெரியவில்லை பின்ன என்ன அவருடைய வலைப்பூ ஓர் கழிவுச்சொற்களின் பெட்டகமாக இருக்கிறது உண்மையில் இதனால் அவர் என்ன லாபம் கண்டாரொ தெரியவில்லை சிலவேளை அவர் தன்னை பிரபலப்படுத்துவதற்காகச்செய்யும் முயற்சியோ ?

அதவிடக்கொடுமை என்னவெண்டால் அவரைத்தூக்கிப்பிடித்துக்கதைக்க ஓசை செல்வா லக்கிலுக் என்று கனபேர் அதுக்குள்ள லக்கி பண்ணுற கூத்து கொஞ்சமே தலைவர் கலைஞர் என வலைப்பூமுழுக்க எழுதுவார் அது சரி கலைஞர் சாதி ஒழிப்பக்கு ஏதாவது செய்தாரா தமிழகத்தில் எத்தனை தடவை திமுக ஆட்சி ஏறியிருக்கும் அதனால் இன்னும் ஏன் பிறப்பு பத்திரம் முதல் பல அரச கருமங்களிருந்து கூட ஜாதியை நீக்க முடியவில்லை?????. யரொவது சிந்தித்தீர்களா

தமிழச்சி உங்களுக்கு வேண்டுகோள் தயவுசெய்த இனியாவது இப்படிக்கெட்ட வார்த்தைகளடங்கிய பதிவுகளை பதிவதை நிறுத்துங்கள் ஏனென்றால் நாம் இன்னும் தமிழ்மணத்தை விரும்புகிறோம் என்பதால் தான் :)

மாயா,பகீ இருவரிடமும்மன்னிப்பு கோருகிறேன்

மன்னிப்புடன் வணக்கம் நான் நந்தவனத்து ஆண்டி பேசுகிறேன் முதலில் மாயா,பகீயிடமும் மன்னிப்பு கோருகிறேன் நான் இதற்கு முன்னைய மயூரனுக்கு கண்டணம் தெரிவித்து பதிவு போடும் வரைக்கும் ஏதோ பெரிய அளவில் இந்தியாவில் நடைபெறுவதுபோல் ஏதாவது பெரிய அளவில் நடைபெற்றதாகவே (மாயாவும் பகீயும் அந்த அளவிற்கு ஆளுமையிருக்கிறது என்பது ஏலவே தெரியும் குறிப்பாக பகீக்கு கொஞ்சம் அதிகம் சஞ்சே பற்றி தெரியாது ) ஆனால் பகீயின் விளக்கப்பின்னூட்டத்திற்குப்பின் தான் தெரிந்தது என்ன நடந்ததென்று ?

அதன்பின் தான் ஓர் நாள் மாயா Google Talk ஊடாக கதைக்கும் போது தான் எல்லாத்தையும் சொன்னார் சொன்னார் என்பதைவிட புலம்பிவிட்டார் என்றே சொல்லவேணும் யார் யாருக்கு அழைப்பு விடுத்து , யார் யார் அழைப்பு விடுத்தும் வரவில்லை , நிர்ஷான் , தாசன் அண்ணாவுக்கு பிந்தி அழைப்பு அனுப்பியபடியால் வரமுடியவில்லை என்றும் , இதற்கு ( அதாவத இந்த குட்டி சந்திப்பு ) பக்கபலமாய் நின்றது பகீயும் சஞ்சேயும் தான் என்றும் கூறியிருந்தார் இதுபற்றி பகீ பின்னூட்டத்தில் இவ்வாறு கூறுகிறார்
// நந்தவத்து ஆண்டி இதில நான் எங்க இருந்து வந்தன்?? சரி இருந்தாலும் நடந்தது என்ன எண்டு எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்லுறன். போன மார்கழி மாசத்தில 25 நாள் கொழும்பில நிண்டதால வலைப்பதியிற ஆக்களை சந்திக்கவேணும் எண்டு நினைச்சு மாயாட்ட சொன்னன். நான்தான் மாயாட்ட முடிஞ்சளவுக்கு தெரிஞ்சாக்களுக்கு சொல்லுங்கோ ஆனா வலைப்பதிவர் சந்திப்பு அப்பிடி எண்டு இல்லாமல் சும்மா எல்லாரும் ஒமேகா இன் இல ஒரு ரீ குடிப்பம் வாங்கோ எண்டு. காண்டீபன் மாயா சஞ்சய் , சஞ்சயுக்கு பின்னூட்டம் போடுற ஆள் பாவை நிசாந்தன் எண்டு கொஞ்சப்பேர் வந்திருந்தினம். என்னெண்டு மாயா எல்லாருக்கும் சொன்னது எண்டு எனக்கு தெரியாது. வந்தியத்தேவன் எனக்கு ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தார் தான் வாறன் எண்டு. பிறகு வரேல்ல. அதுகும் ஏன் எண்டு எனக்கு தெரியாது மாயாட்ட தான் கேக்கோணும்.

முக்கியமா இருந்த பிரச்சனை என்னெண்டா நான் மாயாவை சந்திக்கேக்க மாயா சொன்னது, "இனிமேல் சந்திப்பு எண்ட கதையே இல்லை எண்டு". ஏனெண்டு நான் கேக்கேல்ல. சரி யாராவது சந்திப்பு ஏதும் வைச்சா எனக்கும் சொல்லுங்கோ... வாறன். சிவானி (அக்கா??) இப்ப பிரச்சனை ஒழுங்குபடுத்திறது ஆரெண்டதுதான்.(சரி நான் எங்க அப்பிடி பெரிசா எழுதிப்போட்டன் எண்டுறியள்) //


அது சரி யார் புஸ்பிதா இந்த அவவுக்கு என்ன நடந்ததெண்டு தெரியயாமலே சும்மாவெல்லாம் அறிக்கை விடுறா அவர் இப்படிச்சொல்லுறா
//Road இல் சந்திச்சு hi சொன்னாலும் வலைப்பதிவர் சந்திப்பு என்று சொல்லுவீங்க போல இருக்கே..ஏலவே அறிந்தவர்கள் சந்திப்பதெல்லாம் அவர்கள் பதிவு வைத்திருப்பதால் வலைப்பதிவர் சந்திப்பாகி விடுமா... என்னே அறிவு... புல்லரிக்குது.. //


இதிலையொண்டு தெரியமா பகீக்கு மாயாவையும் சஞ்சேயையும் விட வேறை யாரையும் தெரியாது அதை விட்டுவிட்டு சும்மா பின்னூட்டம் போடுறதுக்கு மட்டு்ம் வந்திடுவியள் நீங்களும் அன்னியன் படத்தில் கூறப்படும் Mutiple Personality Disorder என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் மாதிரித்தான் பின்னூட்டம் போடுறதுக்கு ஓர் Username பதிவுபோட Username வைத்திருக்கிற ஒருவர் தான்


மாயா பகீ வந்தி முதலில் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு இதுவோர் அடித்தளமாயிருந்து விட்டுபோகட்டுமே !

கதைப்பவர்கள் பத்தும் கதைப்பார்கள் அதைவிடுங்கள் ந‌ம் ஊரிலே ,, மென்பொருள் திருட‌ன் , அர‌சிய‌ல் திருட‌ன் போன்றோருட‌ன் வாழ‌வில்லையா நாம். இன்னும் சில‌ கொடிய‌ வில‌ங்குக‌ள் கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கிக் கொண்டுள்ளோம். அதுமாதிரி இந்த‌ இணைய‌த்திலும் சில ''ம‌ன‌ நோயாளிகள்'' இருக்கின்ற‌ன‌ர். எங்கேயாவ‌து த‌ன் உள‌ர‌லை அவ‌ர்கள் பின்னூட்டம் மூலம் கொட்டி விட்டுப் போக‌ட்டுமே.....
ப‌டித்த‌வ‌ன் என‌க் கூறிக்கொள்வப‌வ‌ன் எத்த‌னை பேர் ப‌ண்புட‌ன் ந‌ட‌ந்து கொள்கிறான்...இதில் பெண்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌...
நாம் அன்றாடம் பார்க்காத‌,கேட்காத‌ அசிங்க‌ங்க‌ளா....
இந்த‌ வ‌லைப் பூக்க‌ளில்புதிதாக‌ பார்க்கிறோம்..
பின் ஏன் இங்கே ம‌ட்டும் கூச்ச‌ல்?...,
அதைவிடுத்து நண்பர்களே அப்படியான அருமையான சந்திப்புக்களை முளையிலே கிள்ளிவிடாதீர்கள்

'' இலங்கை வ‌லைப்பூக்க‌ள் வாழ‌ட்டும்
ந‌றும‌ண‌ம் இல்லையென்றாலும்,
வ‌ச‌ந்த‌ம் ஒரு நாள் வீசும்
அத‌ன் வாழ்க்கையை மாற்ற‌"

எதுவாக இருந்தாலும் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். :))

பகீ, வந்தி மற்றும் மாயாவுக்கு மனந்திறந்த மடல்

பகீ வந்தி மற்றும் மாயாவுக்கு மனந்திறந்த மடல் அது சரி என்ன வலைப்பதிவர் சந்திப்பெல்லாம் வைக்கிறீங்களாம் ? சொல்லவேயில்லை தமிழ்நாட்டுக்காரன் வைக்கும் போது நம்ம வைக்கக் கூடாதா? என்று வீம்புக்குவைத்தீர்களா ? சரி ஏதோ வைத்தீர்கள் ஏற்பாட்டுக்குழுவினர் எனக்காட்டிக்கொண்டவர்கள் எமக்கு அறிவித்திருக்கலாம் தானே அல்லது பதிவுகள் மூலம் தெரியப்படுத்தியிருக்கலாம் தானே ? நான் வருவதும் வராததும் வேற விடையம் ஆனால் கடமைக்காவது செல்லியிருக்கலாம்

வலைப்பதிவுகளை நான் புரிந்து கொண்ட மட்டில் அது ஒரு பாரிய சாகரம். வலைப்பதிவின் தோற்றங்கள் கணினி உபயோகிப்பவர்களிடமிருந்தே பிறக்கிறது, பிறக்க முடியும். அதனாலேயே இன்னமும் பிற ஊடகங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலே இப்பதிவுகள் தொடர்கிறது.ஆனால் சமூகம் அல்லது உலகம் அதைவிட மிக விரிந்தது.வலைப்பதிவில் நான் இப்போது முதல் தான் எழுதுகிறேனே அன்றி வலையுலகில் உங்கள் எல்லோருக்கும் பழையவன் கிட்டத்தட்ட 2005 ம் ஆண்டு முதல் இணையத்தில் எங்காவது ஓடிக்கொண்டே இருப்பவன் 2006 ஆண்டு பகுதியில் இணையத்தில் எழுத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல் ஒலி மற்றும் ஒளியும் உலாவரவேண்டும், மற்றும்எழுதப் படிக்க இயலாத எம் தமிழர்களும் இணையம் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அவாவினால் ஒலி மற்றும் ஒளிக்கென வலைப்பூவொன்றை உருவாக்கி அது தமிழ் மணம் குழுமத்தினரால் நிராகரிக்கப்பட்டு அப்படியே அழிடைந்தது போனதும் என் வாழ்வில் ஓர் துன்பியல் நிகழ்வு தான்

மாயா , பகீ , வந்தியத்தேவன் நீங்கள் பெரிய எழுத்தாளர் தரத்தில் எழுதுபவர்கள் எங்களுக்கு அப்படி எல்லாம் எழுத தெரியாது. எங்களுக்கு, உங்களை மாதிரி தத்துவம் அறிவியல் சிந்தனை எல்லாம் ஒத்து வராத விசயம் நாங்களும் வலைபதிகிறோம். என்கின்ற ஒரு பெருமைக்காக ஏதோ வலைப்பதிவை வைத்திருக்கிறோம் அத்துடன் உங்கள் அனைவரிதும் வலைப்பூக்களுக்கு வந்து பின்னுர்ட்டம போடுவதுண்டு அது உங்களை எரிச்சலூட்டி அழவைத்து சந்திப்புக்களின்போது அழைக்காமல் இருக்கும் அளவுக்கு போகும் என்று சத்தியமாக நான் நினைத்ததில்லை.
கேளரவம் படத்தோனியில் சொல்வதானால் "மயூரா நல்லா எழுத வேணும் என்றுதான் தோன்றுகிறது ஆனால் என்னால் முடியவில்லையே ?

நண்பர்களே நாடு இருக்கிற நிலையில இதெல்லாம் தேவையா என்டெல்லாம் கேட்கிற அளவுக்கு நான் ஒன்னும் குறைஞ்சவன் இல்லை ஆனாலும் சொல்லுறன் இப்படியான சந்திப்புக்களின் போது அனைவரக்கும் அறிவித்து ஓர் ஒழுங்கமைவாக ஏற்பாட செய்யுமாறு ஏற்பாட்டுக்குளுவினரான உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்
கடைசியாச்சொல்லுறன் என்னதான் இருந்தாலும் நிங்க செய்தது
பிழைதான்
பிழைதான்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமலே தீயுடன் சங்கமித்த அமரர் தியாகராசா மகேஸ்லரனுடைய பூதவுடல்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் பூதவுடல் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் இறுதி அஞ்சலியுடன் வியாழக்கிழமை 6:30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

வெள்ளவத்தையில் உள்ள மகேஸ்வரனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு இன்று காலை முதல் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அலை மோதியதால் பலர் பூதவுடலை நெருங்கி அஞ்சலி செலுத்த முடியாது அவதிப்பட்டனர்.

இதனையடுத்து இன்று மாலை 3:00 மணியளவில் அவரது பூதவுடல் தகனம் செய்வதற்காக பொரளை மயானத்தை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

வெள்ளவத்தையிலிருந்து மகேஸ்வரனின் பூதவுடலை தாங்கிய இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியதும், அவரது பூதவுடலை குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் பொறுப்பேற்றனர்.

மகேஸ்வரனின் பூதவுடலை அவர்கள் கைகளிலேயே தூக்கிச் சென்றனர். மயானம் வரை அவரது பூதவுடல் கைகளிலேயே ஏந்தி வரப்பட்டது.
வெள்ளவத்தையில் இருந்து ஆரம்பமாகிய இந்த இறுதி ஊர்வலம், கிருலப்பனை ஊடாக பேஸ்லைன் வீதிக்குச் சென்று அங்கிருந்து நாரஹேன்பிட்டி ஊடாக பொரளை மயானத்தைச் சென்றடைந்தது.
இறுதி ஊர்வலம் சென்ற வீதிகள் அனைத்திலும் இருந்த வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு நின்று பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம் பேஸ்லைன் வீதியை அடைந்ததும் மகேஸ்வரனின் பூதவுடலை ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பேற்றுக் கொண்டது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மகேஸ்வரனின் பூதவுடலை பொறுப்பேற்று தமது கைகளில் ஏந்திச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மகேஸ்வரனின் கொலையைக் கண்டிக்கும் பதாகைகளை தாங்கியிருந்தனர். பலர் தமது வாயைக் கறுப்புத் துணியால் கட்டியிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மதத்தலைவர்களும், ஊடகவியலாளர்களும் மகேஸ்வரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

மகேஸ்வரனின் மகன் தந்தையின் பூதவுடலுக்கு தீயிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுவருட நாளினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.மகேஸ்வரனையும் அவரது மெய்ப்பாதுகாவலர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த பொதுமக்களை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்களையும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மருத்துவமனைக்கு மகேஸ்வரன் கொண்டு செல்லப்படும் போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் சுமார் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மகேஸ்வரன் உயிரிழந்ததை கொழும்பு மருத்துவமனைப் பேச்சாளர் சொய்சா உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டார். அவரின் நெஞ்சுப்பகுதியில் பல குண்டுகள் துளைத்திருந்தன. அவரது தலைப்பகுதியையும் குண்டுகள் துளைத்திருந்தன. அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அது பலனளிக்காது அவர் உயிரிழந்தார் என்றார்.மகேஸ்வரன் உயிரிழந்த சிறிது நேரத்தில் காயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறையைச் சேர்ந்தவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறைத்துக் கொண்டது அரசாங்கம். அதன் தொடர்ச்சியாகவே மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.
நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்ததன் விளைவாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். கொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அவரைப் படுகொலை செய்யும் உத்தரவை வழங்கியுள்ளது என்றார்.

சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வழிபாட்டில் நின்ற பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடினர். மகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரை நோக்கி அவரது மெய்ப்பாதுகாவலர்களும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர் என்று கூறப்படுகின்றது.
தற்போது பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை "சக்தி" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மின்னல்" நிகழ்ச்சயில் கலந்துகொண்ட மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் படுகொலைகளுக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.அதன் தொடர்ச்சியாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிற்கான பிரசாரத்தின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவருக்கு வயது 42.இலங்கையில் பெயர் குறிப்பிடத்தக்க வர்த்தகர்களுள் மகேஸ்வரனும் அடங்குவார். அவருக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுட்டு வருகின்றன.ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார்.
இவரது நெருங்கிய சகாவான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் கடந்த வருடம் டிசம்வர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.கடந்த வருடம் நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் அரச தலைவரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாகவும் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருபக்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. எனினும் இதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இச்சம்பவத்தின் சூத்திரதாரி படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.