கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல்


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளது.

For More :- Puthinam

5 பின்னூட்டம்(கள்):

Anonymous said...

நீங்கள் குறிப்பிட்டு உள்ளதுபோல் அவர்கள் வெறுமனே ஒரு காடைக்கும்பல்தான். உண்மையான பௌத்த பிக்குகள் இதுபோன்ற செயல்களில் இறங்கமாட்டார்கள்.

அம்மன் நாட்டார் வழிபாட்டு நம்பிக்கை தெய்வமாவார். அவர் இந்து மதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதே சரி.

காட்டுமிராண்டிகள் கும்பலின் அடாவடி செயலுக்கு எனது கண்டனங்கள்.

Anonymous said...

தமிழன் கலிகாலத்தில் நிம்மதியாச் சாமிகூட கும்பிட முடியல. இலங்கைல சிங்களனுவ தொல்லை தமிழ்நாட்டுல திராவிடனுக தொல்லை.

கண்டி கதிர்காமன்தான் நமக்கெல்லாம் ஒரு நல்லவழி காட்டோனும்!

இறக்குவானை நிர்ஷன் said...

இருக்கிறீர்களா நந்தவனத்து ஆண்டி? உங்களை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் நீங்கள் பதிவிடாததால் தவிர்த்துவிட்டேன். ஏதாவது பிரச்சினையா? இல்லைதானே?

Nimal said...

//கண்டி கதிர்காமன்தான் நமக்கெல்லாம் ஒரு நல்லவழி காட்டோனும்!//

தனக்கே வழி இல்லாம இருக்கிற அவரை ஏன் கரச்சல் படுத்திறியள்...!

நந்தவனத்து ஆண்டி said...

ஏதோ இருக்கிறன் நிர்சான் :))

பிறகு சந்திப்பம்