பகீ வந்தி மற்றும் மாயாவுக்கு மனந்திறந்த மடல் அது சரி என்ன வலைப்பதிவர் சந்திப்பெல்லாம் வைக்கிறீங்களாம் ? சொல்லவேயில்லை தமிழ்நாட்டுக்காரன் வைக்கும் போது நம்ம வைக்கக் கூடாதா? என்று வீம்புக்குவைத்தீர்களா ? சரி ஏதோ வைத்தீர்கள் ஏற்பாட்டுக்குழுவினர் எனக்காட்டிக்கொண்டவர்கள் எமக்கு அறிவித்திருக்கலாம் தானே அல்லது பதிவுகள் மூலம் தெரியப்படுத்தியிருக்கலாம் தானே ? நான் வருவதும் வராததும் வேற விடையம் ஆனால் கடமைக்காவது செல்லியிருக்கலாம்
வலைப்பதிவுகளை நான் புரிந்து கொண்ட மட்டில் அது ஒரு பாரிய சாகரம். வலைப்பதிவின் தோற்றங்கள் கணினி உபயோகிப்பவர்களிடமிருந்தே பிறக்கிறது, பிறக்க முடியும். அதனாலேயே இன்னமும் பிற ஊடகங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலே இப்பதிவுகள் தொடர்கிறது.ஆனால் சமூகம் அல்லது உலகம் அதைவிட மிக விரிந்தது.வலைப்பதிவில் நான் இப்போது முதல் தான் எழுதுகிறேனே அன்றி வலையுலகில் உங்கள் எல்லோருக்கும் பழையவன் கிட்டத்தட்ட 2005 ம் ஆண்டு முதல் இணையத்தில் எங்காவது ஓடிக்கொண்டே இருப்பவன் 2006 ஆண்டு பகுதியில் இணையத்தில் எழுத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல் ஒலி மற்றும் ஒளியும் உலாவரவேண்டும், மற்றும்எழுதப் படிக்க இயலாத எம் தமிழர்களும் இணையம் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அவாவினால் ஒலி மற்றும் ஒளிக்கென வலைப்பூவொன்றை உருவாக்கி அது தமிழ் மணம் குழுமத்தினரால் நிராகரிக்கப்பட்டு அப்படியே அழிடைந்தது போனதும் என் வாழ்வில் ஓர் துன்பியல் நிகழ்வு தான்
மாயா , பகீ , வந்தியத்தேவன் நீங்கள் பெரிய எழுத்தாளர் தரத்தில் எழுதுபவர்கள் எங்களுக்கு அப்படி எல்லாம் எழுத தெரியாது. எங்களுக்கு, உங்களை மாதிரி தத்துவம் அறிவியல் சிந்தனை எல்லாம் ஒத்து வராத விசயம் நாங்களும் வலைபதிகிறோம். என்கின்ற ஒரு பெருமைக்காக ஏதோ வலைப்பதிவை வைத்திருக்கிறோம் அத்துடன் உங்கள் அனைவரிதும் வலைப்பூக்களுக்கு வந்து பின்னுர்ட்டம போடுவதுண்டு அது உங்களை எரிச்சலூட்டி அழவைத்து சந்திப்புக்களின்போது அழைக்காமல் இருக்கும் அளவுக்கு போகும் என்று சத்தியமாக நான் நினைத்ததில்லை.
கேளரவம் படத்தோனியில் சொல்வதானால் "மயூரா நல்லா எழுத வேணும் என்றுதான் தோன்றுகிறது ஆனால் என்னால் முடியவில்லையே ?
நண்பர்களே நாடு இருக்கிற நிலையில இதெல்லாம் தேவையா என்டெல்லாம் கேட்கிற அளவுக்கு நான் ஒன்னும் குறைஞ்சவன் இல்லை ஆனாலும் சொல்லுறன் இப்படியான சந்திப்புக்களின் போது அனைவரக்கும் அறிவித்து ஓர் ஒழுங்கமைவாக ஏற்பாட செய்யுமாறு ஏற்பாட்டுக்குளுவினரான உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்
கடைசியாச்சொல்லுறன் என்னதான் இருந்தாலும் நிங்க செய்தது
பிழைதான்
பிழைதான்
பகீ, வந்தி மற்றும் மாயாவுக்கு மனந்திறந்த மடல்
Subscribe to:
Post Comments (Atom)
16 பின்னூட்டம்(கள்):
உரிய நெரத்தில் சொல்லாதது பிழைதான் :(
பார்ப்பம் நாம ஓர் நாள் நேரில் சந்திப்பமா ?
வாரன் பொறும்
பாவம் இந்த மயூரனை ஏனப்பா இப்படி கஷ்டப்படுத்துறீங்க? இனிவரும் காலத்தில் நாங்கள் சந்திப்போம். நாட்கடந்துதான் மயூரனின் மின்னஞ்சலை நானும் பார்த்தேன்.ம்ம்... தொடருவோம் ஆண்டி...
நந்தவனத்து ஆண்டிக்கு ஒரு தகவல் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் என்னால் அதில் கலந்துகொள்ளமுடியவில்லை. மாயாவுக்கு என்னில் சரியான கோபம் இருக்கலாம். அன்றைய நிலையை நான் நேரில்தான் மாயாவுக்கு விளக்கம் அழிக்கமுடியும். பலதடவை கோல் பண்ணியும் என்னால் சரியாக பதில் அளிக்கமுடியவில்லை. அத்துடன் இந்தச் சந்திப்பு பகி யாழ்ப்பாணத்திலிருந்து வந்தபடியால் நடைபெற்றது.
என்னுடைய தவறுக்கு வருந்துகின்றேன். நிச்சயம் இன்னொரு நாள் சந்திப்போம்.
உங்கள் பதிவில் ஒரு பிழை இருக்கின்றது. அது என்னை பெரிய எழுத்தாளர் வரிசையில் சேர்த்தது. மாயா, மு,மயூரன் அளவிற்க்கு எனது எழுத்து சிறந்ததல்ல.
Sorry to type in english. So many tamil girls started to writing now??? Why don't u call them? Organize a big gettogether one day .but Problem is country situation ...
I am from batticaloa. i likes DJ & kaana praba's blog...When you people ..i mean Foreign tamil bloggers & Srilankan bloggers meet together ..and u can help to tamil people also...
Organize a gettogether in batti or Trinco...& and have good trip also...
If we scare for everything .....nothing will happend ...
Mayuran invite your friend bloggers to ur town..yeh.....i too like to come there
சிவானி அக்கா உங்களுக்கு ரொம்மத்தான் குறும்பு. நாடு இருக்கும் நிலையில் நாங்கள் ஒரு இடமும் திரியமுடியாது. கொஞ்ச நாள் சென்றதும் மட்டகளப்பு, திருகோணமலை என்ன யாழ்ப்பாணத்திலியே சந்திக்கலாம். அதுவரை ஒன்றும் செய்யமுடியாது. உங்களினதும் நண்பிகளினதும் வலைப்பூக்களை இலங்கை வலைப்பதிவாளர் திரட்டியில் பதியுங்கள்.
நந்தவனத்து ஆண்டி !
நாங்கள் ஒன்றும் சந்திப்பென்று பெரிய அளவில் நடத்தவில்லை சும்மா சந்திச்சம் அவ்வளவு தான் .
இன்னுமொண்றையும் சொல்லுறன் இனிமேல் எந்தவொரு வலைப்பதிவிலையும் வலைப்பதிவர் சந்திப்பு
என்ற வார்த்தை காணப்படாது
[அதாவது அதைப்பற்றி இனிமேல் கதைக்கமாட்டன் என்று சொல்ல வாறன்]
எல்லாம் அனுபவம் தான் :((
Sivani இந்த நாள் எப்ப வருமோ தெரியாது
சிவானி அக்கா உங்களினதும் நண்பிகளினதும் வலைப்பூக்களைதெரியப்படுத்தினால் நல்லது தானே
மாயா said...
இனிமேல் எந்தவொரு வலைப்பதிவிலையும் வலைப்பதிவர் சந்திப்பு
என்ற வார்த்தை காணப்படாது
[அதாவது அதைப்பற்றி இனிமேல் கதைக்கமாட்டன் என்று சொல்ல வாறன்]
எல்லாம் அனுபவம் தான் :((
//
என்ன மயூரன் இப்படி சொல்லிட்டீங்க. அப்படியா பழகினோம்.. நம்ம வந்தி நண்பர் சொன்னது போல நிச்சயமாக சந்திப்போம்...
//என்ன மயூரன் இப்படி சொல்லிட்டீங்க. அப்படியா பழகினோம்.. நம்ம வந்தி நண்பர் சொன்னது போல நிச்சயமாக சந்திப்போம்...//
நீங்கள் வேறை நிர்ஷன் மாயாவின் கோபமே என்மேலதான். சில விடயங்கள் சிலருக்கு புரியாது. விட்டுவிடுங்கள் வலிக்கும்
நந்தவத்து ஆண்டி இதில நான் எங்க இருந்து வந்தன்?? சரி இருந்தாலும் நடந்தது என்ன எண்டு எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்லுறன்.
போன மார்கழி மாசத்தில 25 நாள் கொழும்பில நிண்டதால வலைப்பதியிற ஆக்களை சந்திக்கவேணும் எண்டு நினைச்சு மாயாட்ட சொன்னன். நான்தான் மாயாட்ட முடிஞ்சளவுக்கு தெரிஞ்சாக்களுக்கு சொல்லுங்கோ ஆனா வலைப்பதிவர் சந்திப்பு அப்பிடி எண்டு இல்லாமல் சும்மா எல்லாரும் ஒமேகா இன் இல ஒரு ரீ குடிப்பம் வாங்கோ எண்டு. காண்டீபன் மாயா சஞ்சய் , சஞ்சயுக்கு பின்னூட்டம் போடுற ஆள் பாவை நிசாந்தன் எண்டு கொஞ்சப்பேர் வந்திருந்தினம். என்னெண்டு மாயா எல்லாருக்கும் சொன்னது எண்டு எனக்கு தெரியாது. வந்தியத்தேவன் எனக்கு ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தார் தான் வாறன் எண்டு. பிறகு வரேல்ல. அதுகும் ஏன் எண்டு எனக்கு தெரியாது மாயாட்ட தான் கேக்கோணும்.
முக்கியமா இருந்த பிரச்சனை என்னெண்டா நான் மாயாவை சந்திக்கேக்க மாயா சொன்னது, "இனிமேல் சந்திப்பு எண்ட கதையே இல்லை எண்டு". ஏனெண்டு நான் கேக்கேல்ல.
சரி யாராவது சந்திப்பு ஏதும் வைச்சா எனக்கும் சொல்லுங்கோ... வாறன். சிவானி (அக்கா??) இப்ப பிரச்சனை ஒழுங்குபடுத்திறது ஆரெண்டதுதான்.
(சரி நான் எங்க அப்பிடி பெரிசா எழுதிப்போட்டன் எண்டுறியள்)
பகீ உவருக்கெல்லாம் விளக்கம் சொல்லுறீர் . . .
அவர் பாட்டுக்கு கதைச்சிட்டுபோகட்டுமன் அவர விடும்
மற்றும் படி இதில எனக்கு பிரச்சினை ஒன்றுமில்லை :))
முதல்ச் சந்திப்பே கோணல் சந்திப்பாக முடிந்துள்ளது கவலையளிக்கின்றது. இன்னொருதடவை முயற்சி செய்யுங்கள். இந்த வார ஞாயிறு தினக்குரலில் தாசன் என்பவர் இலங்கை வலைப்பூக்காரர் பற்றி எழுதுகின்றார். வீண் சண்டை ஏன்? மாயாவுக்கு இன்னமும் வந்தியத்தேவன் மேலும் நந்தவனத்து ஆண்டி மேலும் உள்ள கோபம் ஆறவில்லைப் போலிருக்கிறது.
Road இல் சந்திச்சு hi சொன்னாலும் வலைப்பதிவர் சந்திப்பு என்று சொல்லுவீங்க போல இருக்கே..
ஏலவே அறிந்தவர்கள் சந்திப்பதெல்லாம் அவர்கள் பதிவு வைத்திருப்பதால் வலைப்பதிவர் சந்திப்பாகி விடுமா...
என்னே அறிவு... புல்லரிக்குது..
//முதல்ச் சந்திப்பே கோணல் சந்திப்பாக முடிந்துள்ளது கவலையளிக்கின்றது.
இன்னொருதடவை முயற்சி செய்யுங்கள்.//
வித்யா ! எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் இருக்கத்தானே வேணும் ?
//மாயாவுக்கு இன்னமும் வந்தியத்தேவன் மேலும் நந்தவனத்து ஆண்டி மேலும் உள்ள கோபம் ஆறவில்லைப் போலிருக்கிறது. //நிச்சயமாக அப்படி ஒன்றுமில்லை :))
எல்லாம் அடங்குங்கப்பா, முறையான ஓரு ஏற்பாடடை செய்து சந்தோசமாக ஆரோக்கியமான ஒரு நிகழ்வா நடத்துங்கோ......
Post a Comment