மாயா,பகீ இருவரிடமும்மன்னிப்பு கோருகிறேன்

மன்னிப்புடன் வணக்கம் நான் நந்தவனத்து ஆண்டி பேசுகிறேன் முதலில் மாயா,பகீயிடமும் மன்னிப்பு கோருகிறேன் நான் இதற்கு முன்னைய மயூரனுக்கு கண்டணம் தெரிவித்து பதிவு போடும் வரைக்கும் ஏதோ பெரிய அளவில் இந்தியாவில் நடைபெறுவதுபோல் ஏதாவது பெரிய அளவில் நடைபெற்றதாகவே (மாயாவும் பகீயும் அந்த அளவிற்கு ஆளுமையிருக்கிறது என்பது ஏலவே தெரியும் குறிப்பாக பகீக்கு கொஞ்சம் அதிகம் சஞ்சே பற்றி தெரியாது ) ஆனால் பகீயின் விளக்கப்பின்னூட்டத்திற்குப்பின் தான் தெரிந்தது என்ன நடந்ததென்று ?

அதன்பின் தான் ஓர் நாள் மாயா Google Talk ஊடாக கதைக்கும் போது தான் எல்லாத்தையும் சொன்னார் சொன்னார் என்பதைவிட புலம்பிவிட்டார் என்றே சொல்லவேணும் யார் யாருக்கு அழைப்பு விடுத்து , யார் யார் அழைப்பு விடுத்தும் வரவில்லை , நிர்ஷான் , தாசன் அண்ணாவுக்கு பிந்தி அழைப்பு அனுப்பியபடியால் வரமுடியவில்லை என்றும் , இதற்கு ( அதாவத இந்த குட்டி சந்திப்பு ) பக்கபலமாய் நின்றது பகீயும் சஞ்சேயும் தான் என்றும் கூறியிருந்தார் இதுபற்றி பகீ பின்னூட்டத்தில் இவ்வாறு கூறுகிறார்
// நந்தவத்து ஆண்டி இதில நான் எங்க இருந்து வந்தன்?? சரி இருந்தாலும் நடந்தது என்ன எண்டு எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்லுறன். போன மார்கழி மாசத்தில 25 நாள் கொழும்பில நிண்டதால வலைப்பதியிற ஆக்களை சந்திக்கவேணும் எண்டு நினைச்சு மாயாட்ட சொன்னன். நான்தான் மாயாட்ட முடிஞ்சளவுக்கு தெரிஞ்சாக்களுக்கு சொல்லுங்கோ ஆனா வலைப்பதிவர் சந்திப்பு அப்பிடி எண்டு இல்லாமல் சும்மா எல்லாரும் ஒமேகா இன் இல ஒரு ரீ குடிப்பம் வாங்கோ எண்டு. காண்டீபன் மாயா சஞ்சய் , சஞ்சயுக்கு பின்னூட்டம் போடுற ஆள் பாவை நிசாந்தன் எண்டு கொஞ்சப்பேர் வந்திருந்தினம். என்னெண்டு மாயா எல்லாருக்கும் சொன்னது எண்டு எனக்கு தெரியாது. வந்தியத்தேவன் எனக்கு ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தார் தான் வாறன் எண்டு. பிறகு வரேல்ல. அதுகும் ஏன் எண்டு எனக்கு தெரியாது மாயாட்ட தான் கேக்கோணும்.

முக்கியமா இருந்த பிரச்சனை என்னெண்டா நான் மாயாவை சந்திக்கேக்க மாயா சொன்னது, "இனிமேல் சந்திப்பு எண்ட கதையே இல்லை எண்டு". ஏனெண்டு நான் கேக்கேல்ல. சரி யாராவது சந்திப்பு ஏதும் வைச்சா எனக்கும் சொல்லுங்கோ... வாறன். சிவானி (அக்கா??) இப்ப பிரச்சனை ஒழுங்குபடுத்திறது ஆரெண்டதுதான்.(சரி நான் எங்க அப்பிடி பெரிசா எழுதிப்போட்டன் எண்டுறியள்) //


அது சரி யார் புஸ்பிதா இந்த அவவுக்கு என்ன நடந்ததெண்டு தெரியயாமலே சும்மாவெல்லாம் அறிக்கை விடுறா அவர் இப்படிச்சொல்லுறா
//Road இல் சந்திச்சு hi சொன்னாலும் வலைப்பதிவர் சந்திப்பு என்று சொல்லுவீங்க போல இருக்கே..ஏலவே அறிந்தவர்கள் சந்திப்பதெல்லாம் அவர்கள் பதிவு வைத்திருப்பதால் வலைப்பதிவர் சந்திப்பாகி விடுமா... என்னே அறிவு... புல்லரிக்குது.. //


இதிலையொண்டு தெரியமா பகீக்கு மாயாவையும் சஞ்சேயையும் விட வேறை யாரையும் தெரியாது அதை விட்டுவிட்டு சும்மா பின்னூட்டம் போடுறதுக்கு மட்டு்ம் வந்திடுவியள் நீங்களும் அன்னியன் படத்தில் கூறப்படும் Mutiple Personality Disorder என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் மாதிரித்தான் பின்னூட்டம் போடுறதுக்கு ஓர் Username பதிவுபோட Username வைத்திருக்கிற ஒருவர் தான்


மாயா பகீ வந்தி முதலில் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு இதுவோர் அடித்தளமாயிருந்து விட்டுபோகட்டுமே !

கதைப்பவர்கள் பத்தும் கதைப்பார்கள் அதைவிடுங்கள் ந‌ம் ஊரிலே ,, மென்பொருள் திருட‌ன் , அர‌சிய‌ல் திருட‌ன் போன்றோருட‌ன் வாழ‌வில்லையா நாம். இன்னும் சில‌ கொடிய‌ வில‌ங்குக‌ள் கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கிக் கொண்டுள்ளோம். அதுமாதிரி இந்த‌ இணைய‌த்திலும் சில ''ம‌ன‌ நோயாளிகள்'' இருக்கின்ற‌ன‌ர். எங்கேயாவ‌து த‌ன் உள‌ர‌லை அவ‌ர்கள் பின்னூட்டம் மூலம் கொட்டி விட்டுப் போக‌ட்டுமே.....
ப‌டித்த‌வ‌ன் என‌க் கூறிக்கொள்வப‌வ‌ன் எத்த‌னை பேர் ப‌ண்புட‌ன் ந‌ட‌ந்து கொள்கிறான்...இதில் பெண்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌...
நாம் அன்றாடம் பார்க்காத‌,கேட்காத‌ அசிங்க‌ங்க‌ளா....
இந்த‌ வ‌லைப் பூக்க‌ளில்புதிதாக‌ பார்க்கிறோம்..
பின் ஏன் இங்கே ம‌ட்டும் கூச்ச‌ல்?...,
அதைவிடுத்து நண்பர்களே அப்படியான அருமையான சந்திப்புக்களை முளையிலே கிள்ளிவிடாதீர்கள்

'' இலங்கை வ‌லைப்பூக்க‌ள் வாழ‌ட்டும்
ந‌றும‌ண‌ம் இல்லையென்றாலும்,
வ‌ச‌ந்த‌ம் ஒரு நாள் வீசும்
அத‌ன் வாழ்க்கையை மாற்ற‌"

எதுவாக இருந்தாலும் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். :))

7 பின்னூட்டம்(கள்):

மாயா said...

சரி சரி COOL

இறக்குவானை நிர்ஷன் said...

ஆண்டிக்கு வணக்கம். நலமா? பதிவினைப் பார்த்ததும் வருத்தமாய் இருக்கிறது. மாயாவின் மின்னஞ்சல் அழைப்பினை தாமதமாகித்தான் வாசித்தேன். அதற்காக அப்போதே மன்னிப்பு கேட்டேன்.

நாங்கள் முகம் பார்க்காதவர்கள்.இருந்தும் இணையத்தில் பலரும் பலவிதத்தில் சுவாரஸ்யமாக உறவுகளை வளர்த்துக்கொண்டுள்ளோம். அப்படித்தானே நந்தவனத்து ஆண்டி?

நிச்சயமாக நாங்கள் இணைந்து இன்னொரு நாளைக்கு சந்திப்போம்.

////Road இல் சந்திச்சு hi சொன்னாலும் வலைப்பதிவர் சந்திப்பு என்று சொல்லுவீங்க போல இருக்கே..ஏலவே அறிந்தவர்கள் சந்திப்பதெல்லாம் அவர்கள் பதிவு வைத்திருப்பதால் வலைப்பதிவர் சந்திப்பாகி விடுமா... என்னே அறிவு... புல்லரிக்குது.. ////


இப்படி சொல்பவர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்? களைகள் வளர்வதைப் பற்றி நெற்செடிகள் கவலைப்படுவதில்லைதானே?
சந்திப்போம்... நிச்சயமாக சாதிப்போம்.

மாயா said...

// கதைப்பவர்கள் பத்தும் கதைப்பார்கள் அதைவிடுங்கள் ந‌ம் ஊரிலே ,................................................., அர‌சிய‌ல் திருட‌ன் போன்றோருட‌ன் வாழ‌வில்லையா நாம். இன்னும் சில‌ கொடிய‌ வில‌ங்குக‌ள் கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கிக் கொண்டுள்ளோம். அதுமாதிரி இந்த‌ இணைய‌த்திலும் சில ''ம‌ன‌ நோயாளிகள்'' இருக்கின்ற‌ன‌ர். எங்கேயாவ‌து த‌ன் உள‌ர‌லை அவ‌ர்கள் பின்னூட்டம் மூலம் கொட்டி விட்டுப் போக‌ட்டுமே.....
ப‌டித்த‌வ‌ன் என‌க் கூறிக்கொள்வப‌வ‌ன் எத்த‌னை பேர் ப‌ண்புட‌ன் ந‌ட‌ந்து கொள்கிறான்...இதில் பெண்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌...
நாம் அன்றாடம் பார்க்காத‌,கேட்காத‌ அசிங்க‌ங்க‌ளா....
இந்த‌ வ‌லைப் பூக்க‌ளில்புதிதாக‌ பார்க்கிறோம்..
//

சொற்பிரயோகம் கடுமையாக இருக்கிறமாதிரி தெரியது தயவு செய்து நீக்கவும்

நந்தவனத்து ஆண்டி said...

நீக்குகிறேன் மாயா

Anonymous said...

// நாங்கள் முகம் பார்க்காதவர்கள்.இருந்தும் இணையத்தில் பலரும் பலவிதத்தில் சுவாரஸ்யமாக உறவுகளை வளர்த்துக்கொண்டுள்ளோம். அப்படித்தானே நந்தவனத்து ஆண்டி? //

King... said...

உங்களுக்கு இருக்கிற பிரச்சனையே இதுதானே... பழைய ஊடகங்கள்தான் அப்பிடியெண்டு பாத்தா வலைப்பதிவும் அப்பிடித்தானோ ம்ம்ம்ம்...

King... said...

நல்ல ஒர குழுமத்திற்குள் சேர்ந்திருக்கிறோம் என்கிற எண்ணம் நமக்கு கட்டாயம் இருக்கத்தானே வேண்டும் எழுத்தும் சிந்தனைகளும் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருக்காது ஆனால் அது நட்பையும் புரிந்துணர்வையும் பாதிக்கக்கூடாது...சரிதானே...