சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2:30 நிமிடமளவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டடத்தை சுற்றிவளைத்துக்கொண்ட குண்டர் குழு ஒன்றே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகின்றது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது அங்கிருந்த பணியாளர்கள் பலரும் ஓடித் தப்பியதாகத் தெரிகின்றது. தாக்குதல் நடத்த வந்தவர்கள் துப்பாக்கிகள், பெற்றோல் குண்டுகள் போன்றவற்றை தம்வசம் வைத்திருந்ததாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலையகத்தை தாக்கியவர்கள் நிறுவனத்தின் பிரதான கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தீ வைத்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளையில் கட்டுப்பாட்டு நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டதனால் கலையகத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ள அதேவேளையில் கலையகத்திலிருந்து நடைபெறும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிகாலையில் வானொலிச் சேவைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன. தீ அணைக்கும் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எம்.ரி.வி. நிறுவனம் மூன்று மொழிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், பண்பலை அலைவரிசை வானொலிச் சேவைகளையும் மூன்று மொழிகளிலும் நடத்தி வருகின்றது.
அந்நாட்டு அரசாங்கத்தின் மீது அதிகளவுக்கு விமர்சனங்களை முன்வைப்பதால் இந்நிறுவனத்தின் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலத்தில் சீற்றமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த அரசை விமர்சித்த எம்.ரி.வி., சக்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தாக்குதல்
நந்தவனத்தில் எழுதியது நந்தவனத்து ஆண்டி @
அடங்கும் வகை இலங்கை
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டம்(கள்):
வாழ்க செய்திச்சேவை உரிமை.
Post a Comment