கிழக்கு மாகாண தேர்தல் - ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண தேர்தலில் மொத்தமாக 308886 வாக்குகளை பெற்று 20 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் 105341 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 59298 பெற்று 4 ஆசனங்களையும், அம்பாறை மாவட்டத்தில் 144,247 வக்குகளை பெற்று 8 ஆசனங்களையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்டத்தில் 70,858 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 58602 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் , அம்பாறை மாவட்டத்தில் 121,272 பெRறு 6 ஆசனங்களையும், மொத்தமாக 250732 வாக்குகளை பெற்று 15 ஆசனக்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பறியுள்ளது . மக்கள் விடுதலை முன்னனி மொத்தமாக 9390 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளதுடன், மக்கள் ஜனநாயக முன்னனி மொத்தமாக 7714 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஜெயராஜ் பெர்னான்டோபிள்ளை மீதான தாக்குதல் வீடியோ வடிவில்

தினக்குரல் பத்திரிகைக்கு அகவை 12

தினக்குரல் பத்திரிகை தனது பத்திரிகைத்துறையில் 11வது ஆண்டை முடித்து 12வது அகவையில் காலடி வைக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

திரு சுஜாதா அவர்களுக்கு அஞ்சலிகள்


சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள். ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.

தமிழச்சி ! உங்கள் ஆட்டத்தைக்கொஞ்சம் நிறுத்துகிறீர்களா

இப்ப தோழர் தமிழச்சியின் போக்கே சரியாயில்லை உண்மையைச்சொன்னப்போனால் அவர்தான் இப்படி எழுதிறாரோ என்டு தெரியவில்லை பின்ன என்ன அவருடைய வலைப்பூ ஓர் கழிவுச்சொற்களின் பெட்டகமாக இருக்கிறது உண்மையில் இதனால் அவர் என்ன லாபம் கண்டாரொ தெரியவில்லை சிலவேளை அவர் தன்னை பிரபலப்படுத்துவதற்காகச்செய்யும் முயற்சியோ ?

அதவிடக்கொடுமை என்னவெண்டால் அவரைத்தூக்கிப்பிடித்துக்கதைக்க ஓசை செல்வா லக்கிலுக் என்று கனபேர் அதுக்குள்ள லக்கி பண்ணுற கூத்து கொஞ்சமே தலைவர் கலைஞர் என வலைப்பூமுழுக்க எழுதுவார் அது சரி கலைஞர் சாதி ஒழிப்பக்கு ஏதாவது செய்தாரா தமிழகத்தில் எத்தனை தடவை திமுக ஆட்சி ஏறியிருக்கும் அதனால் இன்னும் ஏன் பிறப்பு பத்திரம் முதல் பல அரச கருமங்களிருந்து கூட ஜாதியை நீக்க முடியவில்லை?????. யரொவது சிந்தித்தீர்களா

தமிழச்சி உங்களுக்கு வேண்டுகோள் தயவுசெய்த இனியாவது இப்படிக்கெட்ட வார்த்தைகளடங்கிய பதிவுகளை பதிவதை நிறுத்துங்கள் ஏனென்றால் நாம் இன்னும் தமிழ்மணத்தை விரும்புகிறோம் என்பதால் தான் :)